ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 ஆவது லீக் போட்டியான ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை பெறாத நிலையில் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த போட்டி ஐதராபாத்தில் தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
முன்னதாக இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதேபோன்று ஐதராபாத் அணி கொல்கத்தாவுக்கு எதிரான மேட்ச்சில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐதராபாத் அணியில் விளையாடும் வீரர்கள்-
டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்
மும்பை இந்தியன்ஸ் அணி-
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…