• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஐடி நிறுவன வேலையை உதறியவர் இன்று ரூ.260 கோடி நிறுவனத்துக்கு அதிபதி… யார் இவர் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஐடி நிறுவன வேலையை உதறியவர் இன்று ரூ.260 கோடி நிறுவனத்துக்கு அதிபதி… யார் இவர் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது, அதை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என முடிவெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு தைரியம், தொலைநோக்கு பார்வை, நம்மீதே ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் வெற்றிபெற்ற பலரை உதாரணமாக காண்பிக்கலாம். அவர்களில் ஒருவர்தான் சஷி குமார். அக்ஷயகல்பா நிறுவனத்தின் சிஇஓ-வான சஷி குமார், இந்த தொழிலை தொடங்குவதற்கு முன்பு பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோவில் பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய சஷி குமார், இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற இவரது தைரியத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

விளம்பரம்

இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சஷி குமார் தொடங்கிய நிறுவனமே அக்ஷகல்பா ஆர்கானிக். 2010-ம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பால் மற்றும் பால் தயாரிப்புப் பொருட்களை எந்தவொரு ஆண்டிபயாடிக்ஸ், செயற்கைப் பொருட்கள், ஹார்மோன் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் விற்பனை செய்து வருகின்றது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சஷி குமார், ஆர்கானிக் மற்றும் ரசாயனம் கலக்காத பொருட்களுக்கு அதிக தேவையுள்ளது என்பதை உணர்ந்து இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளார். விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்சனை இருப்பதை உணர்ந்து கொண்டார் குமார். தன் தந்தை போன்ற பல விவசாயிகள் எதிர்கொண்ட சிக்கல்களை களைய குமார் முடிவு செய்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆதார் தொடர்பான கிரிமினல் குற்றங்கள் என்னென்ன தெரியுமா? ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய வருமானம் கிடைக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்ட குமார் அவர்களின் பொருட்களை சந்தைக்குச் எடுத்துச் செல்வதற்கு இணைப்பை ஏற்படுத்தினார். இந்த திட்டத்திற்கு லாபகரமாக பொருளாக இருக்க வேண்டும் என நினைத்த குமார், பாலை தேர்வு செய்தார். இவர்கள் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பாலை வாங்கி மக்களுக்கு வழங்கி வருகிறது.

விளம்பரம்

இந்தியாவில் இயற்கை முறையிலான பால் வியாபாரம் என்ற சான்றிதழை பெற்ற முதல் நிறுவனமாக அக்ஷயகல்பா ஆர்கானிக் திகழ்கிறது. மக்களுக்கு அதிக தரமுள்ள பாதுகாப்பான பாலை தர வேண்டும் என்பதற்காக பாரம்பரிய விவசாய முறைகளோடு சேர்த்து நவீன தொழில்நுட்பங்களையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இன்று அக்ஷயகல்பாவின் தனித்துவமான செயல்பாட்டை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிக்க:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்… பயன் தரும் இந்த 5 திட்டங்கள் பற்றி தெரியுமா?

600 பண்ணைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது அக்ஷயகல்பா ஆர்கானிக். இவர்கள் நிறுவனத்தில் திறமை வாய்ந்த 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களது ஆர்கானிக் தயாரிப்புகளை பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் மக்களும் விரும்பி வாங்குகிறார்கள். 2023-ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.260 கோடியாகும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

சூர்யகுமார் அரைசதம்… ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா 181 ரன்கள் குவிப்பு – News18 தமிழ்

Next Post

தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிய தொழிலதிபர்

Next Post
தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிய தொழிலதிபர்

தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிய தொழிலதிபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin