தற்போது இந்தியாவின் பணக்கார நபர்களின் பட்டியலின் முதல் இரு இடங்களில் முகேஷ் அம்பானியும் கவுதம் அதானியும் இருக்கிறார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தப் பட்டியலின் இரண்டாம் இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் பிரேம்ஜியின் பெயர் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் வள்ளல் குணமிக்க நபர்களில் இவரும் ஒருவர். கடந்த ஆண்டு மட்டுமே அசிம் பிரேம்ஜியின் குடும்பத்தினர் ரூ.1774 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோவை மாற்றிய பெருமை அசிம் பிரேம்ஜியையே சேரும். இன்று இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே ரூ.2,78,000 கோடியாகும். இந்தியாவின் மிகப் பிரபலமான தொழிலதிபராக கொண்டாடப்படும் அசிம் பிரேம்ஜி, தன்னுடைய 21-வது வயதில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
சுமார் 53 வருடங்கள் பணியாற்றி விப்ரோ நிறுவனத்தை பல உயரங்கள் எட்ட வைத்த அசிம் பிரேம்ஜி, வயதானதன் காரணமாக தன்னுடைய பொறுப்பை மகனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அசிம் பிரேம்ஜியை தெரிந்த அளவிற்கு அவருடைய மகன் ரிஷாத் பிரேம்ஜியை பலருக்கும் தெரியாது. இவர்தான் இன்று விப்ரோ நிறுவனத்தின் தலைமையேற்று நடத்தி வருகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு பெங்களூரில் வசித்து வரும் ரிஷாத் பிரேம்ஜி, கடந்த வருடம் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டார். கடந்த சில வருடங்களாக விப்ரோ நிறுவனத்தின் வருவாய் பெருமளவு குறைந்து போனதே இதற்கு முக்கிய காரணமாகும். 2022-23 நிதியாண்டில் இவர் வருடத்திற்கு ரூ.8 கோடி சம்பளமாக பெற்று வந்தார்.
இதையும் படிங்க:
EPFO விவரம்.. அதிக வட்டி கிடைக்க இதை செய்தால் போதும்!!
இன்று விப்ரோ நிறுவனத்தில் 2,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஆறு கண்டங்களில் உள்ள நாடுகளில் அமைந்துள்ளது. 2007-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தில் சேர்ந்த ரிஷாத், பல பொறுப்புகளில் பணியாற்றிவிட்டு 2019-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பதவியேற்றார். வெஸ்லியான் பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்ற ரிஷாத், ஹார்வார்டு பிசினஸ் பள்ளியில் சேர்ந்து எம்பிஏ பட்டம் பெற்றார். 2018-19 காலகட்டங்களில் NASSCOM அமைப்பின் தலைவராகவும் ரிஷாத் பிரேம்ஜி பதவி வகித்தார்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்று விப்ரோ எண்டர்பிரைசிஸ் (உள்கட்டமைப்பு பொறியியல் மற்றும் FMCG துறையில் முன்னனி நிறுவனம்), விப்ரோ- GE (விப்ரோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் கூட்டு சேர்ந்து தொடங்கிய நிறுவனம்) மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆகியவற்றின் போடர்டுகளில் ஒருவராகவும் ரிஷாத் பிரேம்ஜி இருக்கிறார். இந்தியாவில் உள்ள பொதுப் பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை, இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் இருக்கும் 3,50,000-க்கும் மேற்பட்ட அரசாங்கப் பள்ளிகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…