• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கு.. ஆனா இல்ல..!! Accenture அறிமுகம் செய்த 50:50 ஃபார்முலா..!! | Accenture changes 2026 salary hike — splits pay between higher basic and lump-sum to cover more employees

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கு.. ஆனா இல்ல..!! Accenture அறிமுகம் செய்த 50:50 ஃபார்முலா..!! | Accenture changes 2026 salary hike — splits pay between higher basic and lump-sum to cover more employees
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கு.. ஆனா இல்ல..!! Accenture அறிமுகம் செய்த 50:50 ஃபார்முலா..!!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்செஞ்சர் (Accenture), தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 50:50 என்ற ஃபார்முலா அடிப்படையில், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு இரண்டு சம பாகங்களாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்செஞ்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து சம்பள உயர்வினை கொண்டு வரும். அந்த வகையில் இந்த ஆண்டு சம்பள உயர்வுக்காக காத்திருந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் பெரிய மாற்றம் வந்துள்ளது. புதிதாக 50:50 என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி ஒரு ஊழியருக்கு அறிவிக்கப்படும் மொத்த சம்பள உயர்வில் 50 சதவீதம் அவரது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் One-time Lump-sum payment முறையில் ஜூன் மாதத்திலேயே வழங்கப்பட்டுவிடும்.

ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கு.. ஆனா இல்ல..!! Accenture அறிமுகம் செய்த 50:50 ஃபார்முலா..!!

உதாரணமாக ஒரு ஊழியருக்கு 3% சம்பள உயர்வு வழங்கப்பட்டால், அதில் 1.5% அவரது அடிப்படை சம்பளத்தில் நிரந்தரமாக சேர்க்கப்படும். மீதமுள்ள 1.5% ஒருமுறை மொத்த தொகையாக கிடைக்கும். அக்செஞ்சர் நிறுவனத்தில் உள்ள 7.8 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கும், குறிப்பாக இந்தியாவில் உள்ள சுமார் 3.5 லட்சம் ஊழியர்களுக்கும் இந்த முறை பொருந்தும். கடந்த ஆண்டை விட அதிகப்படியான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக நிறுவனம் கூறுகிறது.

பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த 50:50 முறை பொருந்தாது. பதவி உயர்வினால் கிடைக்கும் சம்பள உயர்வு முழுமையாக அடிப்படை சம்பளத்திலேயே சேர்க்கப்படும். இந்த ஒருமுறை வழங்கப்படும் Lump-sum தொகை, டிசம்பர் மாதம் வழங்கப்படும் வருடாந்திர செயல்திறன் போனஸிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவை இரண்டுக்கும் தொடர்பில்லை என அக்செஞ்சர் விளக்கம் தந்துள்ளது.

மேலும் அடிப்படைச் சம்பள உயர்வு மற்றும் ஒருமுறை வழங்கப்படும் தொகை ஆகிய இரண்டுமே ஊழியரின் அந்த ஆண்டிற்கான மொத்த வருவாயாக கருதப்படும். இது அவர்களின் போனஸ் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.கடந்த ஆண்டு அக்செஞ்சர் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கியிருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க இப்படி ஒரு மாற்றம் கொண்டுவந்துள்ளது. தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊதிய செலவை கட்டுக்குள் வைத்திருக்கவும், அதே நேரத்தில் அதிக ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கவும் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்துள்ளது.

சில ஊழியர்கள் உடனடியாக கையில் பணம் கிடைப்பதை வரவேற்றாலும், ஒருமுறை வழங்கப்படும் தொகை அடிப்படை சம்பளத்தில் சேராததால், அது நீண்டகால வருவாய் வளர்ச்சியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

Share This Article

English summary

Accenture changes 2026 salary hike — splits pay between higher basic and lump-sum to cover more employees

ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கு.. ஆனா இல்ல..!! Accenture அறிமுகம் செய்த 50:50 ஃபார்முலா..!!- Accenture has adjusted its 2026 salary-hike model to increase the basic pay portion while offering a separate lump-sum payout, aiming to extend raises to a larger share of employees across India.

Story first published: Monday, July 20, 2026, 8:07 [IST]

Other articles published on Jul 20, 2026

Read More

Previous Post

ரத்தத்தில் ஊறிப்போன இனவெறி, நிறவெறி.. அர்ஜென்டினா தோல்வியை பலரும் கொண்டாடுவது ஏன்? ஷாக் பின்னணி | Why are many celebrating Messi fall? Inside Argentina’s Football Racism Controversy

Next Post

நெகிரி தேர்தல்: 107 பிரச்சார அனுமதிகளுக்கு காவல்துறை ஒப்புதல்- இரண்டு நாசவேலை வழக்குகள் குறித்து விசாரணை | Makkal Osai

Next Post
நெகிரி தேர்தல்: 107 பிரச்சார அனுமதிகளுக்கு காவல்துறை ஒப்புதல்- இரண்டு நாசவேலை வழக்குகள் குறித்து விசாரணை | Makkal Osai

நெகிரி தேர்தல்: 107 பிரச்சார அனுமதிகளுக்கு காவல்துறை ஒப்புதல்- இரண்டு நாசவேலை வழக்குகள் குறித்து விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin