இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உங்கள் வரி ரீஃபன்ட் ஸ்டேட்டஸை சரிபார்ப்பது எளிதானது. உங்கள் பான் கார்டு மூலம், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தே ஆன்லைனில் உங்கள் வரி ரீஃபன்ட் ஸ்டேட்டஸை விரைவாக சரிபார்க்கலாம். இதற்கிடையில், சிலர் தங்கள் வருமான வரி பணத்தை திரும்பப் பெறுவது குறித்த குழப்பத்தில் உள்ளனர். பணத்தை திரும்பப் பெறுவதற்கு வங்கி விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பணத்தை திரும்பப் பெறுவதற்கான நிலையை நீங்கள் இணையதளத்திலேயே சரிபார்த்துக் கொள்ள முடியும்.
உங்களுடையை பான் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் வருமான வரி பணத்தை திரும்பப் பெறுவதை எப்படி சரிபார்ப்பது?
கடந்த மாத இறுதியில் வருமான வரித்துறையால் பகிரப்பட்ட அப்டேட்டின்படி, 5 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் 2024-25 ஆண்டிற்கான தங்கள் வருமான வரிக் கணக்கை (ITRs) தாக்கல் செய்துள்ளனர். வரி செலுத்துவோர் தங்கள் ITRகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது. வருமான வரி இணையதளத்தில் உள்ள டேட்டாக்களின்படி, 5.14 கோடி வரி செலுத்துவோர் 2024-25 ஆண்டிற்கான ஐடிஆர்களை தாக்கல் செய்துள்ளனர்.
இவற்றில், இதுவரை 4.67 கோடி ITRகள் சரிபார்க்கப்பட்டு, அதில் 2.22 கோடி ITRகள் செயல்படுத்தப்பட்டன என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு அதனை சரிபார்த்த பிறகே, நீங்கள் கூடுதலாக செலுத்திய டேக்ஸ் ரீஃபன்ட் ப்ராசஸ் தொடங்கும்.
இதையும் படிக்க:
ஆயுஷ்மான் திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்? இனி இவர்களும் பயனடைவார்களா? முழு விவரம்
அதிகமாக செலுத்தப்பட்ட வரி திரும்ப கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில், வரி செலுத்துவோரின் கணக்கில் 4 முதல் 5 வாரங்களுக்குள் அதிகம் செலுத்தப்பட்ட வரி பணம் திரும்ப செலுத்தப்பட்டு விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை ரீஃபண்ட் தொகை மேற்கூறப்பட்ட காலத்திற்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்றால் வருமான வரி கணக்கு தாக்கலில் (ITR) ஏதேனும் தவறு இருக்கிறதா என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வருமான வரித்துறையிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் இ-மெயில் வந்துள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இ-ஃபைலிங் இணையதளத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறை ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்கலாம்.
இ-ஃபைலிங் இணையதளம் மூலம் வருமான வரி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிலையை சரிபார்ப்பது எப்படி?
1: அதிகாரப்பூர்வ ஆன்லைன் இ ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்
2: உங்கள் யூசர் ஐடி / பான் / ஆதார் மூலம் லாகின் செய்யவும்.
இதையும் படிக்க:
சர்ச்சைக்குரிய தொழிலதிபரின் மகள்; தற்போது வளர்ந்துவரும் தொழிலதிபர்; யார் இந்தப் பெண்?
3: ஸ்கிரீனில் காட்டப்படும் “கேப்ட்சா கோட் -ஐ” என்டர் செய்யவும்.
4: “மை அக்கவுண்ட்” என்ற பிரிவுக்குச் சென்று, ‘ரீஃபன்ட்/டிமாண்ட் ஸ்டேட்டஸ்’ பட்டனைக் கிளிக் செய்யவும்.
5: உங்கள் வருமான வரி திரும்பப் பெறுதலின் நிலை, அசெஸ்மென்ட் இயர், ஸ்டேட்டஸ், பணத்தைத் திரும்ப பெறாததற்கான காரணம் மற்றும் பணம் செலுத்தும் முறை போன்ற தகவல்கள் காண்பிக்கப்படும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)