• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் நமக்குள் ஆயிரம் சோர்வுகள் இருக்கலாம். “இந்த வயதுக்கு மேல் என்னால் புதிதாக எதையாவது சாதிக்க முடியுமா?” என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அனைத்தையும் இழந்து, வாழவே வழியில்லை என நினைத்த ஒரு பெண்மணி, தனது 67-வது வயதில் தடகளப் பாதையில் ஓடத் தொடங்கி, 100 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த சாதனைப் பெண்மணி ஐடா கீலிங் (Ida Keeling).

ida-keeling
ida-keeling

மே 15, 1915-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹார்லெம் பகுதியில் பிறந்தார் ஐடா ஒலிவியா பாட்டர் (Ida Olivia Potter). அமெரிக்காவின் பெரும் பொருளாதார மந்தநிலை காலத்தில் அவரது இளமைக் காலம் கழிந்தது. இளம் வயதிலேயே தன் தாயை இழந்தார்.

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி வந்த அவருக்கு, 42 வயதில் மற்றொரு பேரிடி காத்திருந்தது. அவரது கணவர் மாரடைப்பால் திடீரென மரணமடைய, நான்கு குழந்தைகளைத் தனி ஒருத்தியாக வளர்க்கும் பொறுப்பு ஐடாவின் தோள்களில் விழுந்தது.

Motivation Story: நடுக்கடல்… 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை!

வாழ்க்கை அவருக்குத் தந்த வலிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. 1978 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் அவரது இரண்டு மகன்களும் (சார்லஸ் மற்றும் டொனால்ட்) போதைப்பொருள் தொடர்பான வன்முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். பெற்ற பிள்ளைகளை அடுத்தடுத்து இழந்த துயரம் ஐடாவை மனதளவில் சுக்குநூறாக உடைத்தது. அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி, வீட்டிற்குள்ளேயே முடங்கினார்.

ida-keeling
ida-keeling

ஐடாவின் மகள் ஷெல்லி கீலிங் (Shelley Keeling) ஒரு வழக்கறிஞர் மற்றும் தடகளப் பயிற்சியாளர். தன் தாயின் இருண்ட மனநிலையைக் கண்டு துடித்த அவர், தாயை மீட்க ஒரு வித்தியாசமான வழியைக் கையாண்டார்.

1982-ம் ஆண்டு, தனது 67-வது வயதில் இருந்த ஐடாவுக்கு ஒரு ஜோடி ரன்னிங் ஷூக்களை வாங்கிக் கொடுத்து, 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கட்டாயப்படுத்திப் பங்குபெறச் செய்தார்.

ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி ஓடத்தொடங்கிய ஐடா, அந்தப் பந்தயத்தை ஓடி முடித்தபோது ஒரு புதிய உத்வேகத்தை உணர்ந்தார். “ஓடும்போது என் கவலைகள் எல்லாம் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து காணாமல் போவது போல் உணர்ந்தேன்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். அங்கிருந்துதான் அந்த இரும்புப் பெண்மணியின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது.

Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!’ – சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி?

67 வயதில் ஓடத் தொடங்கிய ஐடா, வயதாக ஆக தனது வேகத்தையும் இலக்கையும் அதிகப்படுத்தினார். உலகம் வியந்த அவரது சாதனைகளின் பட்டியல் இதோ:

  • 95 வயது: மன்ஹாட்டனில் நடந்த ஒரு தடகளப் போட்டியில் 60 மீட்டர் தூரத்தை 29.86 வினாடிகளில் கடந்து தனது வயதுப் பிரிவில் உலக சாதனை படைத்தார்.

  • 97 வயது: 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 51.85 வினாடிகளில் ஓடி அமெரிக்க சாதனை (W95 பிரிவு) படைத்தார்.

  • 99 வயது: 100 மீட்டர் தூரத்தை 59.80 வினாடிகளில் கடந்து, 99 வயதில் அதிவேகமாக ஓடிய பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.

  • 100 வயது: ஏப்ரல் 30, 2016-ல் ‘பென் ரிலேஸ்’ (Penn Relays) தடகளப் போட்டியில் சுமார் 44,469 பார்வையாளர்கள் முன், 100 மீட்டர் ஓட்டத்தை (1 நிமிடம் 17.33 வினாடிகள்) முழுமையாக முடித்த வரலாற்றின் முதல் 100 வயது பெண்மணி என்ற மாபெரும் சாதனையைத் தன் வசமாக்கினார்.

  • 102 வயது: 100 முதல் 104 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 60 மீட்டர் தூரத்தை 58.34 வினாடிகளில் கடந்து மீண்டும் உலக சாதனை படைத்தார்.

ida-keeling book
ida-keeling book

ஐடா தனது அனுபவங்களை `Can’t Nothing Bring Me Down’ என்ற சுயசரிதை புத்தகமாக 2018-ல் வெளியிட்டார். அதில் அவர், “உங்கள் பிரச்னைகளைச் சுமந்துகொண்டு முடங்கிவிடாதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். உங்களை நீங்களே நேசியுங்கள்” என்று ஒரு செய்தியை நமக்கு விட்டுச் சென்றார்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, அளவான உணவை உண்பது என மிக எளிமையான ஆனால் ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த அவர், ஆகஸ்ட் 25, 2021 அன்று, தனது 106-வது வயதில் அமைதியாக இயற்கை எய்தினார்.

ஒரு பெண் தன் கணவரையும் இரண்டு மகன்களையும் இழந்து, 67 வயது வரை எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடாமல் முடங்கி இருந்து, அதன் பிறகு ஓடத் தொடங்கி 100 வயதில் உலக சாதனைகளை முறியடிக்க முடிகிறது என்றால்… நம் கனவுகளைத் துரத்தவோ, நம் இலக்கை அடையவோ `வயது’ ஒருபோதும் தடையாக இருக்காது.

Motivation Story: `நம்பினால் வெற்றி!’ உலகின் முதல் பெண் இயக்குநர்! – மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! 

Read More

Previous Post

”60 வயது வரை நீங்க விளையாடணும்” – ஓய்வு குறித்து சிவகார்த்திகேயன் பேசியதற்கு தோனி அளித்த பதில்! | Dhoni | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

நாட்டின் 50% எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது – பிரதமர் – Malaysiakini

Next Post

நாட்டின் 50% எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது – பிரதமர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin