Last Updated:
மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனை ஐசியூ-வில் அனுமதிக்க தாமதமானதால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவமனை சார்பில் ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ICU-வில் இருந்த ஒரு இளம் நோயாளியை மாற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழக்க நேரிட்டதை அடுத்து மகாராஷ்டிரா நுகர்வோர் ஆணையம் நாசிக்கில் அமைந்திருக்கும் வோக்ஹார்ட் மருத்துவமனையின் சேவைகளில் குறைபாடு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
“சரியான பராமரிப்பைப் பெறுவதற்கான உரிமை நோயாளிகளுக்கு உள்ளது. அதிலும் நேரத்திற்கு ஏற்ப அவர்களுக்கான பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்” என்று இந்த மாதத் துவக்கத்தில் வெளியிடப்பட்ட ஆணையில் மாநில நுகர்வோர் தகராறு தீர்க்கும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் அனுபவித்துவரும் மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்பிற்கு 18 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தந்தை பதிவு செய்துள்ள புகாரின் அடிப்படையில் அவருடைய மகன் ஏப்ரல் 15, 2010 அன்று மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக நாசிக்கில் அமைந்திருக்கும் வோக்ஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், புகார் அளித்தவர் கூறியபடி, தன்னுடைய மகனின் நிலை ஏப்ரல் 16ஆம் தேதி அன்று அதிகாலை மிகவும் மோசமானதாகவும், கழிப்பறைக்குச் சென்றபோது நெஞ்சு வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தன்னுடைய மகனின் நிலை மோசமானதையும் பொருட்படுத்தாமல் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று காலை 6:00 மணி வரை மருத்துவமனை அவரை ICU பிரிவில் அனுமதிக்காமல் இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய மகன் காலை 8:30 மணி அளவில் இறந்திருந்தாலும், ஆதாரத்தைத் திரட்டுவதற்காக மருத்துவமனை மதியம் வேளைவரை தொடர்ந்து வீணான சிகிச்சை அளித்து வந்ததுபோல நடித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். அதிகாரப்பூர்வமாக நோயாளி நண்பகல் 12:50-க்கு இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் சேவையில் உள்ள குறைபாடு காரணமாகவே தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக புகார் அளித்தவர் கூறுகிறார்.
நோயாளிக்கு உடனடி ICU பராமரிப்பு தேவைப்பட்டாலும், மருத்துவமனை அவரை உடனடியாக அங்கு அனுமதிக்காததன் காரணமாக இந்த நோயாளிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று புகார் அளித்தவர் கூறுகிறார். இதனை அடுத்து புகார் அளித்தவர் மாநில ஆணையத்தை அணுகியுள்ளார். ஆனால், வோக்ஹார்ட் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தாங்கள் எந்தவொரு அலட்சியமும் காட்டவில்லை என்பதையும், அனைத்து விதமான நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.
மருத்துவமனை கூறுவதன்படி, நோயாளியின் தந்தை ICU பிரிவில் அனுமதிப்பதற்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனை நிரூபிப்பதற்கு மருத்துவமனை சார்பில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று ஆணையம் குறிப்பிடுகிறது. என்னதான் மருத்துவர்கள் அலட்சியம் காட்டவில்லை என்று கூறினாலும் சரியான நேரத்தில் நோயாளியை ICU பிரிவிற்கு மாற்றாததன் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆணையம் கூறுகிறது.
August 01, 2025 7:49 PM IST
ஐசியூ-வில் அனுமதிக்க தாமதமானதால் இளைஞர் உயிரிழப்பு…! மருத்துவமனை சார்பில் ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…