Last Updated:
இந்திய கிரிக்கெட்டிடம் எப்போதும் அபாரமான திறமை இருந்தது. தற்போது அந்தத் திறமை மைதானத்தில் வெற்றிகளாக மாறத் தொடங்கியுள்ளது.
பிசிசிஐ-யின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில், இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, அவருக்கு உயரிய விருதான ‘கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது’ வழங்கிக் கௌரவிக்கப்படது. இந்த நிகழ்வில் பேசிய டிராவிட், கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வளர்ந்த விதம் பிரமிக்க வைப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. ஆண்களுக்கான இரண்டு டி20 உலகக் கோப்பைகள், பெண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் உலகக் கோப்பைகள் என அனைத்து ஐசிசி (ICC) கோப்பைகளையும் இந்தியா வென்றுள்ளது.
இது குறித்துப் பேசிய டிராவிட், “இந்திய கிரிக்கெட்டிடம் எப்போதும் அபாரமான திறமை இருந்தது. தற்போது அந்தத் திறமை மைதானத்தில் வெற்றிகளாக மாறத் தொடங்கியுள்ளது. இதற்குக் கடின உழைப்பாளிகளான வீரர்கள், சிறந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளே காரணம்” என்று புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் குறித்து பேசிய டிராவிட், “சஞ்சு நீண்ட காலமாக அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். கடினமான காலங்களைச் சந்தித்த அவர், உலகக் கோப்பையின் கடைசி மூன்று முக்கியமான போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து, இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகுந்த நிறைவைத் தருகிறது” என்று கூறினார்.
Mar 15, 2026 10:30 PM IST


