Last Updated:
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடம், ரோகித் ஷர்மா 781 புள்ளிகளுடன் முன்னிலை, விராட் கோலி 2வது இடம், ஷூப்மன் கில் 5வது, குல்தீப் யாதவ் 3வது இடம்.
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 2 ஆவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், ரோகித் ஷர்மா முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இதன் மூலம், ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் 121 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
இதே போன்று, வீரர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர் ரோகித் ஷர்மா 781 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2 சதம், ஒரு அரை சதம் என 302 ரன்கள் எடுத்த விராட் கோலி 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் உள்ள ரோகித் ஷர்மாவை விட விராட் கோலி 8 புள்ளிகள் குறைவாக 2 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஷூப்மன் கில், 723 புள்ளிகளுடன் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சை பொறுத்தவரை, இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ், 655 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார்.
December 11, 2025 7:54 AM IST


