• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா மோதல் இன்று தொடக்கம் | ICC World Test Championship Final Australia South Africa clash begins today

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா மோதல் இன்று தொடக்கம் | ICC World Test Championship Final Australia South Africa clash begins today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டங்களில் அந்த அணியை வீழ்த்துவது என்பது மற்ற அணிகளுக்கு கடினமாகவே இருந்து வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் 13 முறை இறுதிப் போட்டியில் கால்பதித்து 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தற்போது உலகலாவிய தொடரில் 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை சந்திக்கிறது நடப்பு சாம்பியனான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணி கடந்த முறை இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணி பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் பலமுறை அந்த அணி நாக் அவுட் சுற்று வரை வருவதும் வெளியேறுவதுமாக இருந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.

2023-25-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 30 வீரர்களை பயன்படுத்தியது. இது மற்ற அணிகளைவிட அதிகமாகும். பார்மில் இருந்த வீரர்களை பேட்டிங், பந்துவீச்சில் சரியாக பயன்படுத்தி வெற்றிக்கான வழிகளை கண்டறிந்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவித்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

2023-25-ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவில்லை. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-0 என வென்றிருந்தது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்த சுழற்சியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் மோதவில்லை. அந்த அணி ஒட்டுமொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை உள்ளூர் டி 20 தொடருக்காக புறக்கணித்து இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 19 டெஸ்ட் போட்டிகளிவில் விளையாடி 13 வெற்றிகளை பெற்றிருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த சுழற்சியில் அந்த அணி வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்டில் மோதவில்லை.

இறுதிப் போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் மட்டுமே அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்த போட்டி 3 நாட்களில் முடிவடைந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி கடந்த 10 வருடங்களாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்கவில்லை.

2023-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடி 11 வீரர்களில் 10 பேர் தற்போதைய அணியில் உள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளனர். ஹேசில்வுட் சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி 22 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார்.

மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோரும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சுழலில் மிரட்ட நேதன் லயன் ஆயத்தமாக இருக்கக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் உஸ்மான் காவஜாவுடன் தொடக்க வீரராக சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கக்கூடும். நடுவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

மார்னஷ் லபுஷேன் மட்டுமே பார்மின்றி தவித்து வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அவரது சராசரி 28.33 ஆக இருந்தது. இதனால் மட்டை வீச்சில் அவர், கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் 3 சதங்கள் விளாசிய உள்ள அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோன்று கடைசியாக விளையாடி 5 டெஸ்டில் 4 சதங்கள் அடித்துள்ள ஸ்டீவ் ஸ்மித்தும், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 58 ஆக உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் களமிறங்க உள்ளனர். கேப்டன் தெம்பா பவுமா 4-வது வீரராக களமிறங்குவார். டோனி டி ஸோர்ஸி, டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன், ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். பந்து வீச்சில் காகிசோ ரபாடா, மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, கேசவ் மகராஜ் கூட்டணி ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

ரூ.30 கோடி பரிசு: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கதையுடன் ரூ.30.80 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு வழங்கப்படும்.

விளையாடும் லெவன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 11 பேர் கொண்ட பட்டியலை நேற்றே இரு அணிகளும் அறிவித்தன. அதன் விவரம்:

ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஷ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

தென் ஆப்பிரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின், மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி.

நேரம்: பிற்பகல் 3, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்



Read More

Previous Post

வீடு, ஆபீஸ், மால், கார் வரை.. AC பயன்பாட்டில் முக்கிய மாற்றம்..!

Next Post

சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து | Licenses of 960 pharmacies temporarily revoked for illegally selling medicines

Next Post
சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து | Licenses of 960 pharmacies temporarily revoked for illegally selling medicines

சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து | Licenses of 960 pharmacies temporarily revoked for illegally selling medicines

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin