இந்த புதிய விதிமுறைகள் அனைத்து வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் மற்றும் வெள்ளை-லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கும் பொருந்தும். ஜனவரி 2025 நிலவரப்படி, இந்தியாவில் 1,30,902 ஆன்-சைட் ஏடிஎம்கள் மற்றும் 85,804 ஆஃப்-சைட் ஏடிஎம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வு, குறிப்பாக சிறிய வங்கிகளைச் சார்ந்த வாடிக்கையாளர்களை பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.

