
Last Updated:
Kaamya Karthikeyan | ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்ட இளம்பெண் என்ற சாதனையை காம்யா கார்த்திகேயன் படைத்து உள்ளார்.
ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்ட இளம்பெண் என்ற சாதனையை காம்யா கார்த்திகேயன் படைத்து உள்ளார்.
மும்பையில் உள்ள பள்ளியில் காம்யா கார்த்திகேயன் என்பவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். 17 வயதான இவர், அண்டார்டிகாவின் வின்சன் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதனால் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்ட இளம்பெண் என்ற சாதனைக்கு இவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
Also Read: புத்தாண்டை குடும்பத்தோடு கொண்டாட… அல்டிமேட்டான 7 ஸ்பாட்கள்!
மலை ஏறும் பயணத்தை, தனது 13ஆவது வயதில் தொடங்கிய காம்யா, ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவில் எல்ப்ரஸ் மலையில் ஏற்கனெவே ஏறியிருந்தார். அதேபோல, ஆஸ்திரேலியாவில் கொஸ்கியுஸ்கோ மலை, தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா, வட அமெரிக்காவில் டெனாலி, ஆசியாவில் எவரெஸ்ட் ஆகியவற்றிலும் காம்யா கார்த்திகேயன் ஏறி இருந்தார். இறுதியாக, அண்டார்டிகாவில் வின்சன் மலையை ஏறியதன் மூலமாக இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.
December 30, 2024 10:22 AM IST

