இரண்டு புதிய நியமனங்கள் உட்பட ஏழு அமைச்சர்கள் மற்றும் எட்டு புதிய துணை அமைச்சர்கள் இன்று காலை இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். Singgahsana Kecilஇல் காலை 10 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
தலைமை நீதிபதி வான் அஹ்மத் ஃபரித் வான் சலே சாட்சியாக, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் தங்கள் நியமன ஆவணங்களில் கையெழுத்திட்டனர். அன்வார் நேற்று பல இலாகாக்களின் நியமனங்கள் மற்றும் மாற்றங்களை அறிவித்தார்.
புதிய அமைச்சர்கள் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ரமணன், அம்னோ வனிதா தலைவர் நோரைனி அஹ்மட், ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மல் நசீர், சபா பிகேஆர் தலைவர் முஸ்தபா சக்முட், பார்ட்டி பெர்சத்து ரக்யாட் சபா தலைவர் ஆர்தர் ஜோசப் குருப், செனட்டர் சுல்கிஃப்ளி ஹசான், சுங்கைப் பட்டாணி ஜோஹார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தாவ். புதிதாக நியமிக்கப்பட்ட துணை அமைச்சர்கள் சிம் ட்ஸீன், ஷஹர் அப்துல்லா, ஆர் யுனேஸ்வரன், மொர்டி பிமோல், சையத் இப்ராஹிம் சையத் நோ, சிவ் சூன் மான், லோ சூ ஃபூய் மற்றும் மர்ஹமா ரோஸ்லி ஆகியோர் ஆவர்.
The post ஏழு அமைச்சர்கள், எட்டு புதிய துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
