(தி. மோகன்)
கோலாலம்பூர்,
தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் ஏஜென்சியான எஸ்எம்இ கார்ப் மலேசியா ஏற்பாட்டில் SME Venture@ASEAN 2025 எனும் ஏற்றுமதி சந்தை மாநாடு 2025 அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை கோலாலம்பூர் மலேசிய அனைத்துலக வாணிப கண்காட்சி மையத்தில் (மிட்டெக்) நடைபெறுகிறது.
மலேசியா இவ்வாண்டு ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதை முன்னிட்டு சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) மிக முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இந்தக் கண்காட்சி மாநாடு விளங்குகிறது. இதனை முன்னிட்டு தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் ஓர் அறிமுக நிகழ்ச்சியை நேற்றுத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியானது எஸ்எம்இ நிறுவனங்கள், அவற்றின் திறமைகளையும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஆளுமையையும் நிரூபிக்கக்கூடிய ஒரு களமாக இந்த மாநாடு திகழ்கிறது. ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் ஏற்றுமதிச் சந்தையில் வழங்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் இந்த மாநாடு ஒரு சந்தர்ப்பத்தைத் தருவதாக இருக்கிறது.
ஆசியானை உங்களுக்கு மிக அணுக்கமாகக் கொண்டு வருகிறது என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டுக் கண்காட்சிக்குக் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 300க்கும் அதிகமான உள்நாட்டு, அனைத்துலக நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்களுள் பெரும்பாலானவை ஆசியான் உறுப்பு நாடுகளையும் வர்த்தகப் பங்காளிகளையும் சேர்ந்தவை களாக இருக்கும். இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்கள் அவற்றின் அண்மைய கண்டுபிடிப்புகள், உற்பத்திப் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றைக் கண்காட்சியில் இடம்பெறச் செய்யும்.
மின்னியல், மின்சாரம், ஆயில் அண்ட் கியாஸ் பயோடெக்னோலோஜி, மருத்துவக் கல்விகள், ஏரோஸ்பேஸ், சுற்றுலா, விவேக விவசாயம், ஹலால் தொழில்துறைகள் ஆகியவை ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கக்கூடிய துறைகளாக விளங்குகின்றன.
SME Venture@ASEAN 2025 என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல ஆனால் அதிகப்பட்ச வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு களம் என்று டத்தோ இவோன் பெனடிக் குறிப்பிட்டார். உள்நாட்டு எஸ்எம்இ நிறுவனங்கள் ஆசிய சந்தையில் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெறுவதற்கு 200 வர்த்தகச் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எஸ்எம்இ கார்ப் மலேசிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை உறுதி செய்வதில் மிகுந்த கடப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. துருக்கி, ஜப்பான், சவூதி அரேபியா, ஓமான், ஜோர்ஜியா, கஸகஸ்தான் ஆகிய பங்காளி நாடுகளில் இருந்தும் முக்கிய நிறுவனங்களையும் இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ்எம்இ நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய அளவிலும் தங்களது உறுதியான நிலைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று எஸ்எம்இ கார்ப் மலேசியா தலைமைச் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்எம்இ கார்ப் மலேசியா – சிலாங்கூர் மாநில செயல் அதிகாரி ரிஸால் பின் டத்தோ நைனி மேம்பாட்டுக் கழகம் (பிகேஎம்எஸ்) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதையும் டத்தோ இவோன் பெனடிக் பார்வையிட்டார்.