• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏற்றுமதிக்கு திறந்தது வழி… அமெரிக்காவுக்கு பறக்கும் நாமக்கல் முட்டை…

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஏற்றுமதிக்கு திறந்தது வழி… அமெரிக்காவுக்கு பறக்கும் நாமக்கல் முட்டை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 19, 2025 3:18 PM IST

நாமக்கல்லிலிருந்து ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவிற்கும் ஏற்றுமதியாகியுள்ளது.

+

ஏற்றுமதிக்கு

ஏற்றுமதிக்கு திறந்தது வழி… அமெரிக்காவுக்கு பறக்கும் நாமக்கல் முட்டை…

முட்டை நகரம் என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் சுமார் 95% பங்கு வகிக்கிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன.

இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு சில விதிமுறைகள் உள்ளன.

வெளிநாட்டுக்கு முட்டைகள் (eggs) ஏற்றுமதி செய்ய அரசாங்க ஒப்புதல், சரியான தரச்சான்றிதழ்கள் மற்றும் விலங்குகளின் நலனுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல முக்கியமான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் ஏற்றுமதி உரிமம் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும். முட்டைகளுக்கு தரச்சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

இது குறித்து முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் ஜெகன் ராஜேந்திரன் கூறுகையில், “முதல் முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு 21 கண்டெய்னர் வீதம் ஒரு கண்டெய்னருக்கு 4,72,320 முட்டைகளை நாமக்கல்லில் இருந்து நேரடியாக முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கத்தார் போன்ற நாடுகளில் 60 கிராம் எடையுள்ள ‘AA’ அல்லது ‘A’ தர முட்டைகளை மட்டுமே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் முட்டைகள் பொதுவாக 55 கிராம் எடையுள்ளது. நாமக்கல்லில் இருந்து முதல் கட்டமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள நாமக்கல் முட்டைகளை ஏற்கும் பட்சத்தில் அதிகளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும்” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Namakkal,Tamil Nadu

First Published :

July 19, 2025 3:12 PM IST

Read More

Previous Post

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி!

Next Post

இறுதிச் சடங்குகளில் இடைத்தரகர்களாகச் செயல்படும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – Malaysiakini

Next Post
இறுதிச் சடங்குகளில் இடைத்தரகர்களாகச் செயல்படும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – Malaysiakini

இறுதிச் சடங்குகளில் இடைத்தரகர்களாகச் செயல்படும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin