கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.
`இது உலக நாடுகளைப் பாதிக்கும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார்.
இந்தக் கட்டுப்பாடுகள் விதிப்பிற்கு சீனா,
“தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது.
சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது” என்று காரணம் கூறுகிறது.