Last Updated:
ஏர் இந்தியா நிறுவனமானது, HDFC வங்கியுடன் இணைந்து பண்டிகை கால தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்களில் பயணிகளுக்கு பெரும் சேமிப்பு கிடைக்கும்.
பண்டிகை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனம், HDFC வங்கியுடன் இணைந்து, தங்கள் விடுமுறை பயணங்களைத் திட்டமிட விரும்பும் விமானப் பயணிகளுக்கு அற்புதமான தள்ளுபடிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆம், ஏர் இந்தியா நிறுவனமானது, HDFC வங்கியுடன் இணைந்து பண்டிகை கால தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணங்களில் பயணிகளுக்கு பெரும் சேமிப்பு கிடைக்கும். ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த சலுகை அக்டோபர் 1 முதல் அக்டோபர் 18, 2025 வரையிலான காலகட்டத்தில் செய்யப்படும் புக்கிங்ஸ்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல ஏர் இந்தியா வெப்சைட் அல்லது மொபைல் ஆப் மூலம், HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது மட்டுமே இந்த பண்டிகை கால ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
ரவுன்ட்-ட்ரிப் இன்டர்நேஷனல் புக்கிங்ஸ்களில் இந்த பண்டிகை கால தள்ளுபடி மூலம் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். பிசினஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸில் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு அதிகபட்சம் ரூ.6,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும். அதேநேரம் பிரீமியம் எகானமி கிளாஸில் பயணம் செய்யும் விமானப் பயணிகளுக்கு ரூ.3,000 தள்ளுபடியும், எகானமி கிளாஸில் பயணிப்போருக்கு ரூ.2,500 தள்ளுபடியும் கிடைக்கும்.
அதேநேரம் ஒன்-வே இன்டெர்நேஷனல் டிக்கெட்ஸ்களை புக்கிங் செய்யும் பிசினஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகளுக்கு ரூ.2,000, பிரீமியம் எகானமி பயணிகளுக்கு ரூ.1,500, எகானமி பயணிகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும். சர்வதேச விமானப் பயணத்திற்கான சலுகையுடன், ஏர் இந்தியா மற்றும் HDFC வங்கிகள் இணைந்து உள்நாட்டு பயணிகளுக்கும் டிக்கெட் புக்கிங்கில் சேமிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
இந்திய நகரங்களுக்குள் செல்லும் விமானங்களுக்கு, வாடிக்கையாளர்கள் ‘HDFCFLY’ என்ற ப்ரமோஷன் கோட் பயன்படுத்துவதன் மூலம் எந்த கேபின் கிளாஸ் டிக்கெட்டிலும் ஃபிளாட் ரூ.400 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம். இந்த லிமிட்டட்-பீரியட் பண்டிகை சலுகை அமலில் உள்ள நாட்களில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே பொருந்தும் மற்றும் ஏர் இந்தியாவில் நேரடியாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் அடிப்படை கட்டணத்திற்கு (base fare) மட்டுமே செல்லுபடியாகும்.
மொத்தத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு ரூ.400 முதல் சர்வதேச பயணங்களில் ரூ.6,000 வரையிலான சிறப்பு தள்ளுபடியுடன், இந்த பண்டிகை கால டீல் விடுமுறைக்கு விமானப் பயணங்களை புக் செய்வோர் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகள் என இருவருக்கும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. மேலும், பண்டிகை காலத்திற்காக விமானப் பயணம் செய்ய தயாராகும் பயணிகளுக்கு, விமான முன்பதிவுகளில் பெரிய அளவில் சேமிக்க இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.
October 10, 2025 4:14 PM IST


