தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற நான்குபாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் உயிரிழப்பு
அவர்களில் ஒரு மாணவர் மீட்கப்பட்டதுடன், நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் அனைவரும் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த நான்கு மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள்
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்கள் (16) பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

