ராஜஸ்தானின் சாம்பார் ஏரியில் 520 வெளிநாட்டுப் பறவைகள் இறந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் ஏரியைச் சுற்றி ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் முகாமிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதியில் இருந்து கொத்துக் கொத்தாக பறவைகள் உயிரிழந்தன. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஏவியன் போட்யூலிசம் எனப்படும் பாக்டீரியா தாக்குதலால் பறவைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, இறகு மற்றும் கால் முடக்குதலுக்கு வழிவகுக்கிறது என்றும், இது பெரும்பாலும் மரணத்தில் முடிவதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, சிகிச்சை மூலம் குணமடைந்த பறவைகள் ஏரியில் விடப்பட்டன.
நோய் வாய்ப்பட்டுள்ளதாக கண்டறிப்பட்ட சுமார் 235 பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
