• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா. | Migrant boat sinks off coast of Yemen, leaving at least 49 dead and 140 missing, says U.N. agency

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா. | Migrant boat sinks off coast of Yemen, leaving at least 49 dead and 140 missing, says U.N. agency
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சனா(ஏமன்): சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக்கொண்டு ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று பயணித்தது. 320 கிலோமீட்டர் பயணித்த நிலையில் அந்த படகு, ஏமனின் தெற்கு கடற்கரையில் திங்கள்கிழமை மூழ்கியது. இதில், குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 140 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 3க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேக அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமதலி அபுனஜெலா, “புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான மற்றுமொரு நினைவூட்டலாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அவசரமாக புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

“பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யேமனில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இருந்தபோதிலும், 2021 முதல் 2023 வரை ஆண்டுதோறும் அந்நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27,000 இலிருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,80,000 புலம்பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளனர்” என்று புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

7.5 கோடி மெம்பர்களுக்கு பரிசளித்த EPFO… இனி இந்த மாதிரி வேலைகளை ஆன்லைனிலேயே செய்யலாம்!

Next Post

தென்கிழக்கு ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான மகிழ்ச்சியான 3ஆவது நாடு மலேசியா | Makkal Osai

Next Post
தென்கிழக்கு ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான மகிழ்ச்சியான 3ஆவது நாடு மலேசியா | Makkal Osai

தென்கிழக்கு ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான மகிழ்ச்சியான 3ஆவது நாடு மலேசியா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin