ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் வெளிப்படையாக சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா முஹம்மட் ஷெரீப் தெரிவித்தார்.
சிகரெட்டுகள், புகைபிடிக்கும் பொருட்களை மூடிய அலமாரிகளில் பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
மேலும் சில்லறை விற்பனைக் கடைகளில் புகையிலை, வேப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறும் தனிநபர்களுக்கு 500 முதல் 30,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறை தண்டனையும் வழங்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.