ஏப்ரல் மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அந்தவகையில், 150,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவிலிருந்தே (India) அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதிக சுற்றுலாப் பயணிகள்
மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 866,596 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

