Last Updated:
சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வது வழக்கம்.
சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை 8.2 சதவீதம் என்ற விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்பதை சமீபத்தில் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வது வழக்கம்.
இந்த திட்டம் மூலமாக பெறும் வட்டி பணத்திற்கு வரி செலுத்துவது அவசியம். மேலும், இந்த வட்டி தொகை 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். சேமிப்புத் திட்ட கணக்கை ஒருவர் 1,000 ரூபாய் என்ற குறைந்தபட்ச டெபாசிட் தொகை மூலமாக திறக்கலாம். மேலும், அதிகபட்சமாக இந்த அக்கவுண்டில் 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். இதற்கான கால அளவு 5 வருடங்கள் ஆகும். மேலும், இதனை மூன்று வருடங்கள் நீட்டிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது.
2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2024 நிதியாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்தின்போது அரசு 3 வருட டைம் டெபாசிட்டுகள் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா ஆகிய சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது.
அதாவது 3 வருட டைம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 7% முதல் 7.1% அதிகரிக்கப்பட்டது. மேலும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% முதல் 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பிற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் இருந்தன.
இதையும் படிக்க: Home loan | மூத்த குடிமக்கள் வீட்டுக் கடன் பெற முடியுமா…? கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன…?
சீனியர் சிட்டிசன் சேமிப்புக் கணக்கை கால அளவுக்கு முன்னரே மூடுவதற்கான விதிகள்:
- அக்கவுன்ட்டை திறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் அதை மூடலாம்.
- முதல் வருடத்திற்குள் அக்கவுன்ட்டை மூடிவிட்டால், உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் வழங்கப்படாது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டியும் திரும்பப் பெறப்படும்.
- ஒரு வருடத்திற்கு பிறகு, ஆனால் 2 வருடங்கள் முடிவடைவதற்கு முன்பு கணக்கை மூடினால் முதல் தொகையிலிருந்து 1.5% ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
- 2 வருடங்களுக்குப் பிறகு, ஆனால் 5 வருடங்கள் நிறைவு பெறுவதற்கு முன்னரே நீங்கள் அக்கவுன்ட்டை மூடினால் முதல் தொகையிலிருந்து 1% அபராதத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.
- நீட்டிக்கப்பட்ட அக்கவுன்ட்டுகளை எந்த ஒரு பிடித்தங்கள் இல்லாமல் ஒரு வருட நீட்டிப்பு காலத்திற்குப் பிறகு உங்களால் மூட இயலும்.
April 04, 2025 1:26 PM IST
ஏப்ரல் – ஜூன் 2025: சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்: மாற்றங்கள் இருக்கிறதா…?


