
பகல் மட்டுமல்லாமல் இரவு முழுவதும் ஏசி பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளது.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல வீடுகளில் ஏசி (AC) இல்லாமல் இருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பகல் மட்டுமல்லாமல் இரவு முழுவதும் ஏசி பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளது. ஆனால் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் கரென்ட் பில்லை குறைக்க முடியும்.
சரியான வெப்பநிலை முக்கியம்
பலர் ஏசியை 16°C அல்லது 18°C-ல் வைத்தால் அறை சீக்கிரம் குளிரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான பழக்கம். 24°C முதல் 26°C வரை வைத்தால் அறை சீராக குளிரும். இதனால் மின்சார பயன்பாடும் குறையும். ஒவ்வொரு டிகிரி உயர்த்தும் போதும் சுமார் 6% வரை மின்சாரம் சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஃபேன் (Fan) உடன் சேர்த்து பயன்படுத்துங்கள்
ஏசி ஓடும்போது சீலிங் ஃபேனை (Ceiling Fan) குறைந்த வேகத்தில் இயக்கினால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் விரைவாக பரவும். இதனால் ஏசி கம்ப்ரஸர் (Compressor) அதிக நேரம் வேலை செய்ய வேண்டியதில்லை. அறையும் சீக்கிரம் குளிரும்.
வெயில் அறைக்குள் வராமல் தடுக்கவும்
ஜன்னல் வழியாக நேரடி வெயில் அறைக்குள் வந்தால் ஏசியின் வேலை அதிகரிக்கும். தடிமனான திரைச்சீலைகள் அல்லது ஹீட் ரெஃப்ளக்டிவ் ஃபிலிம் (Heat Reflective Film) பயன்படுத்தினால் அறை வெப்பம் குறையும். இதனால் ஏசி குறைந்த மின்சாரத்திலேயே சிறப்பாக செயல்படும்.
பில்டரை (Filter) சுத்தமாக வைத்திருங்கள்
ஏசியின் பில்டரில் தூசி படிந்தால் காற்றோட்டம் குறையும். இதனால் ஏசி அதிக மின்சாரம் பயன்படுத்தும். 15 நாட்களுக்கு ஒருமுறை பில்டரை கழற்றி தண்ணீரில் சுத்தம் செய்து பொருத்தினாலே மின்சார செலவை குறைக்கலாம்.
கதவு மற்றும் ஜன்னல் இடைவெளிகளை மூடுங்கள்
அறையில் உள்ள குளிர்ந்த காற்று வெளியேறினால் ஏசி தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். கதவு, ஜன்னல் இடுக்குகள் இருந்தால் டோர் சீல் (Door Seal) அல்லது துணி வைத்து அடைத்துவிடுங்கள். இது மின்சார சேமிப்புக்கு உதவும்.
ஸ்லீப் மோட் (Sleep Mode) பயன்படுத்துங்கள்
இரவு தூங்கும்போது ஸ்லீப் மோட் பயன்படுத்துவது நல்லது. இது வெப்பநிலையை மெதுவாக உயர்த்தி, அதிகாலை நேரத்தில் தேவையற்ற குளிரூட்டலை குறைக்கும். இதனால் மின்சார பயன்பாடும் குறையும், உடலுக்கும் சௌகரியம் கிடைக்கும்.
இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றினால், வெயில் காலத்திலும் ஏசியை சுலபமாக பயன்படுத்தி கரென்ட் பில்லை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

