நீலகிரி மாவட்டத்தில் முட்டைக்கோஸ் அதிகமாகப் பயிரிடப்படுவது போல ப்ரோக்கோலியையும் விவசாயிகள் ஆர்வமாகச் சாகுபடி செய்கின்றனர். ப்ரோக்கோலி சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் பண்ணைகளில் நாற்றுகள் வாங்கி தயார் செய்திருக்கும் நிலத்தில் நடவு செய்கின்றனர்.
பின்னர் எரு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்படுகிறது. குறைந்த முதலீட்டிலேயே அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும் என்பதால் விவசாயிகள் ப்ரோக்கோலி சாகுபடியில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ப்ரோக்கோலி பயிரிட்டிருக்கும் விவசாயி முத்துக்குமார் இதுகுறித்து கூறுகையில், “முன்பெல்லாம் ப்ரோக்கோலி அதிகம் விரும்பப்படுவதில்லை.
ஆனால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்பதால் தற்போது அதிக அளவில் மக்கள் விரும்புவதால் நல்ல விற்பனை நடக்கிறது. ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் விற்பனையானாலே லாபகரமானதாக இருக்கும். ப்ரோக்கோலி பயிரிடுவதால் அதிக லாபமும் கிடைக்கிறது விற்பனையும் எளிதான முறையில் இருக்கின்றது. அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டதால் அதிக மக்கள் விரும்பி வாங்குகின்றனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், விவசாயி சேகர் கூறுகையில், “ப்ரோக்கோலி லாபகரமாக இருப்பதால் பயிர் இடுகிறோம். ஒரு ஏக்கருக்குச் செலவுகள் போகலாக 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. முன்பெல்லாம் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகும். தற்போது 200 முதல் 250 வரை விற்பனை ஆவதால் லாபகரமாக உள்ளது. இதர பயிர்களை விட ப்ரோக்கோலி பயிரிடுவதற்கு முதலீடு குறைவாகவே உள்ளது.
இதன் விதைகள் கடைகளில் கிடைக்கின்றது. அதனை நாற்றுகளாக வளர்ப்பதற்குப் பராமரிப்பு அதிகம் தேவைப்படுவதால் நாற்றுகளாகவே வாங்கிக் கொள்கிறோம். ப்ரோக்கோலி நடவு செய்த நாள் முதல் 70 நாட்களில் தயாராகிறது. மேலும் 100 நாட்கள் வரையிலும் ப்ரோக்கோலியை எடுக்க முடியும். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகிறது. 100 முதல் 150 வரை விற்பனையானாலே 2 முதல் 3 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)