Last Updated:
ஏஐ உச்சி மாநாடு பிப்ரவரி 16 முதல் 20ஆம் தேதி வரை டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
டெல்லியில் நடைபெற உள்ள ஏஐ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
பிப்ரவரி 16 முதல் 20ஆம் தேதி வரை டெல்லி பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும், 19ஆம் தேதி இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, 50 நாடுகளின் அமைச்சர்கள், ஐநா பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மன், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, Gates அறக்கட்டளை தலைவர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரும், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஏஐ தொடர்பான முதலீடுகளும் கையெழுத்தாக உள்ளதாக தெரிகிறது.


