நீதிமன்ற தீர்ப்பு
இதற்கிடையே, இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 24.04.2024 அன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 21.06.2024 அன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக், கடந்த 08.07.2024 அன்று உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு, 05.09.2024 முதல் 08.09.2024 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக, இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.