பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தகவல்களையும் விரைவாகப் பெற பல ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. உங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட்டில் பேலன்ஸ் பற்றி தெரிந்துக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. உங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட்டில் பேலன்ஸ் விவரங்களை சரிபார்க்க ஆன்லைனில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.
மிஸ்டு கால் பேங்கிங் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் சரிபார்ப்பு:
மிஸ்டு கால் என்ற வங்கி சேவையைப் பயன்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டில் பேலன்ஸ் விவரங்களை சரிபார்க்க முடியும். இருப்பினும், இந்த சேவையை பெற நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். எஸ்பிஐ மிஸ்டு கால் பேங்கிங் சேவைக்கு நீங்கள் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
1. உங்கள் Android அல்லது iOS மொபைலில் இருந்து மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்.
2. REGஅக்கௌன்ட் எண் டைப் செய்யவும்.
3. இப்போது, வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
இதையும் படிக்க:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!
இதன் மூலம், நீங்கள் எஸ்பிஐ மிஸ்டு கால் வங்கி சேவைக்கு பதிவு செய்ய முடியும். மேலும், வங்கி உங்களுக்கு இரண்டு விருப்பங்களில் சேவையை வழங்குகிறது, அதாவது எஸ்பிஐ பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றைச் சரிபார்க்க கட்டணமில்லா 2 எண்களை வழங்குகிறது. அது,
1. 9223766666: எஸ்பிஐ பேலன்ஸ் பெற இந்த எண்ணைப் பயன்படுத்தலாம்.
2. 9223866666: உங்கள் எஸ்பிஐ கணக்கின் கடைசி ஐந்து பரிவர்த்தனை விவரங்களைப் பெற இந்த எண்ணைப் பயன்படுத்தலாம்.
வாட்ஸ்அப் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் சரிபார்ப்பு:
1. உங்கள் ஸ்மார்ட்போனில் +919022690226 எண்ணைச் சேமிக்கவும்.
2. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்து இந்த எண்ணைத் தேடவும்.
3. உங்கள் சேட் பாக்ஸில் பெட்டியில் ஹாய் என டைப் செய்து புதிய சேட்டை தொடங்கவும்.
4. இப்போது, பிராம்ப்ட்டில் இருந்து கெட் பேலன்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இதன் மூலம், உங்கள் எஸ்பிஐ பேலன்ஸ் பற்றிய தகவல்களை எளிதாகப் பெறுவீர்கள்.
எஸ்எம்எஸ் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் சரிபார்ப்பு:
1. உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்.
2. BAL என டைப் செய்யவும்.
3. இப்போது, வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து +919223766666 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
யோனோ ஆப் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் சரிபார்ப்பு:
1. உங்கள் மொபைலில் யோனோ ஆப்பை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2. ஆப்பை ஓபன் செய்து, உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வர்ட் பயன்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டை லாகின் செய்யவும்.
3. ஆப்பில் உங்கள் பின் அல்லது பயோமெட்ரிக்ஸை முதல் முறையாக அமைக்க வழிமுறைகளைப் பின்பற்றவும்.
4. இவை அனைத்தும் முடிந்ததும், ஹோம் ஸ்கிரீனில் வியூ பேலன்ஸ் ஆப்ஷன்களை பார்ப்பீர்கள்.
5. அதை டேப் செய்தவுடன், உங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸை காண்பீர்கள்.
நெட் பேங்கிங் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் சரிபார்ப்பு:
1. உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் பிரௌசரில் https://www.onlinesbi.sbi/ என்ற இணையதளத்தில் லாகின் செய்யவும்.
2. பேர்சொனல் பேங்கிங் கீழ் லாகின் என்பதைக் கிளிக் செய்யவும். உங்களிடம் கார்ப்பரேட் பேங் இருந்தால், கார்ப்பரேட் பேங்கிங் கீழ் லாகின் என்பதைக் கிளிக் செய்யவும்.
3. லாகின்க்கு கான்டினியூ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வர்ட் டைப் செய்து இமேஜ் கேப்ட்சா கோட்-ஐ டைப் செய்யவும்.
4. முடிந்ததும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை சரியான நேரத்திற்குள் டைப் செய்யவும்.
5. அதன் பிறகு எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங்கின் ஹாம்பேஜ்க்கு வரும்.
6. இப்போது, அக்கவுண்ட் சம்மரிக்கு சென்று, அண்டர் ட்ரான்ஸாக்ஷன் அக்கவுண்ட்டில், பேலன்ஸ் ஆப்ஷன் என்பதை கிளிக் செய்யவும்.
7. இதன் மூலம், உங்களது எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸை காண முடியும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)