Last Updated:
ஜாயிண்ட் அக்கவுண்டாக இருக்கும் பட்சத்தில் அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களும் இறந்த பிறகு நாமினி அந்த அக்கவுண்டிற்கான உரிமையை கோரலாம். சரியான நாமினேஷன் இல்லாமல் சட்டபூர்வமான வாரிசுகள் வாரிசு சான்றிதழ்கள் அல்லது பிற சட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். இதனால் கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறை தாமதமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஆன்லைனில் உங்களுடைய SBI அக்கவுண்டிற்கு ஒரு நாமினியை சேர்ப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய ஆன்லைன் SBI அக்கவுண்டிற்கு லாகின் செய்ய வேண்டும். அடுத்ததாக ‘ரெக்வெஸ்ட் & என்கொயரிஸ்’ பிரிவிற்குச் சென்று, அதில் ‘ஆன்லைன் நாமினேஷன்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் நாமினியை சேர்க்க விரும்பும் அக்கவுண்ட் நம்பரை தேர்வு செய்யுங்கள். பிறகு நாமினி விவரங்களை துல்லியமாக நிரப்பி, இறுதியாக இந்தச் செயல்முறையை நிறைவு செய்வதற்கு ‘சப்மிட்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
YONO அப்ளிகேஷன் மூலமாக ஒரு நாமினியை சேர்ப்பதற்கோ அல்லது அப்டேட் செய்வதற்கோ முதலில் நீங்கள் YONO அப்ளிகேஷனை திறந்து, அதில் உள்ள ‘சர்வீசஸ் & ரெக்குவஸ்ட்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு ‘அக்கவுண்ட் நாமினி’ என்பதை கிளிக் செய்து, ‘மேனேஜ் நாமினி’ என்பதை தேர்வு செய்யுங்கள். இப்பொழுது காணப்படும் டிராப்டவுன் மெனுவில் இருந்து நீங்கள் நாமினி சேர்க்க விரும்பும் அக்கவுண்ட் நம்பரை தேர்வு செய்ய வேண்டும். பிறகு கவனமாக நாமினி உடைய விபரங்களை நிரப்பி ‘சப்மிட்’ என்பதை கிளிக் செய்து இந்தச் செயல்முறையை நிறைவு செய்யலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மூலமாக ஒரு நாமினேஷனை பதிவு செய்வதற்கு கஸ்டமர்கள் நாமினேஷன் படிவத்தை ஹோம் பிரான்சிலிருந்து பெறலாம் அல்லது ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிறகு அந்தப் படிவத்தில் நாமினியின் விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும். பிறகு படிவத்தை கையெழுத்திட்டு, அதனை ப்ராசஸ் செய்வதற்கு ஹோம் பிரான்சில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை நீங்கள் சமர்ப்பித்த பிறகு வங்கி உங்களுக்கு ஒப்புதல் சீட்டு ஒன்றை கொடுக்கும். எதிர்கால தேவைக்காக அதனை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நபர் தன்னுடைய இறப்பிற்கு பிறகு தனது பேங்க் அக்கவுண்ட், லாக்கர் அல்லது விலை மதிப்புள்ள பொருட்களுக்கான உரிமையை மற்றொரு நபருக்கு கொடுக்க நாமினேஷன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாமினேஷன் என்பது டெபாசிட் அக்கவுண்டுகள், சேஃப் கஸ்டடி ஆர்டிகிள்ஸ் மற்றும் சேஃப் டெபாசிட் வால்ட்ஸ் போன்றவற்றிற்கு கிடைக்கிறது. இது தனிநபர் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்டுகளுக்கு பொருந்தும்.
ஒரு அக்கவுண்ட் ஹோல்டர் இறந்த பிறகு அவருடைய உடைமைகள் சம்பந்தப்பட்ட செட்டில்மெண்ட் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் விரைவாக நிறைவடைவதற்கு இந்த நாமினேஷன் உதவுகிறது. அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து போகும் பட்சத்தில் அவருடைய பேலன்ஸ் தொகையை கிளைம் செய்யும் உரிமை நாமினிக்கு உண்டு. ஜாயிண்ட் அக்கவுண்டாக இருக்கும் பட்சத்தில் அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களும் இறந்த பிறகு நாமினி அந்த அக்கவுண்டிற்கான உரிமையை கோரலாம். சரியான நாமினேஷன் இல்லாமல் சட்டபூர்வமான வாரிசுகள் வாரிசு சான்றிதழ்கள் அல்லது பிற சட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். இதனால் கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறை தாமதமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
October 20, 2025 7:53 AM IST