ஒரு காலத்தில் மிகச்சிலரே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்தனர். முதற்கட்டத்தில் கிரெடிட் கார்டுகளுக்கு என்ற எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஏராளமான மக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய ஆஃபர்கள், சலுகைகள் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்களுக்காகவே ஒரு சிலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளனர். கிரெடிட் கார்டுகளை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் நமக்கு லாபம்தான். ஆனால் அளவுக்கு அதிகமாக செலவு செய்பவர்களுக்கு நிச்சயமாக அது பாதகமாக முடியும்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வழங்குனர்களில் ஒருவரான எஸ்பிஐ கார்டு அதன் பாலிசிகளில் குறிப்பிடத்தக்க சிலர் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வாடகை சம்பந்தப்பட்ட பேமெண்ட் ட்ரான்ஸாக்ஷன்களை செய்யக்கூடிய கஸ்டமர்கள் சம்பாதிக்கும் ரிவார்டுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஏப்ரல் 1, 2024 முதல் ஒரு சில எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் கஸ்டமர்கள் செய்யும் வாடகை பெமெண்ட்களுக்கு எந்த ஒரு ரிவார்ட் பாய்ண்ட்ஸ்களும் இனி கிடைக்காது.
இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக மார்ச் 1, 2024 முதல் DreamFolks மெம்பர்ஷிப்பிற்கான பிசிக்கல் கார்டுகள் வழங்குவதை நிறுத்துவதற்கு எஸ்பிஐ கார்டு முடிவு செய்துள்ளது. அதன் சேவைகளை ஒழுங்குப்படுத்தி ஏற்கனவே இருக்கக்கூடிய கஸ்டமர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு எஸ்பிஐ கார்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
குறைந்தபட்ச செலுத்த வேண்டிய தொகைக்கான ஃபார்முலா :
இந்த மாற்றங்களுடன் சேர்ந்து மார்ச் 15, 2024 முதல் குறைந்தபட்ச செலுத்த வேண்டிய தொகையை கணக்கிடுவதற்கு ஒரு புதிய பார்முலாவையும் எஸ்பிஐ கார்டு அமல்படுத்த உள்ளது. இது பில்லிங் செயல்முறைகளில் நியாயத்தையும் வெளிப்படை தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. கஸ்டமர்களின் நலனுக்காக இது மாதிரியான ஒரு சில மாற்றங்களை எஸ்பிஐ கார்டு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் பட்டியல் ஒரு சில பின்வருமாறு:
– SBI கார்டு எலைட்
– SBI கார்டு எலைட் அட்வான்டேஜ்
– SBI கார்டு பல்ஸ்
– SimplyCLICK SBI கார்டு
– SimplyCLICK அட்வான்டேஜ் SBI கார்டு
– SBI கார்டு PRIME
– SBI கார்டு PRIME அட்வான்டேஜ்
– SBI கார்டு பிளாட்டினம்
– SBI கார்டு PRIME ப்ரோ
– SBI கார்டு ஷவுர்யா செலக்ட்
– SBI கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ்
– SimplySAVE SBI Card
– SimplySAVE எம்ப்ளாயி SBI கார்டு
– SimplySAVE அட்வான்டேஜ் SBI கார்டு
– Gold மற்றும் பல டைட்டானியம் SBI கார்டு
– SBI கார்டு Unnati
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…