Last Updated:
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோ பலருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர்
எக்ஸ் தளத்தில் தற்போது ஒரு வீடியோ ஒன்று அதிக பார்வையை குவித்து வருகிறது. இந்த வீடியோவில் பெண் ஒருவரது சேலை காற்றில் பறக்க அது குறித்து பின்னால் பைக்கில் வந்த நபர் எச்சரித்தார்.
இதனை பொருட்படுத்தாத நிலையில், அந்த பெண்ணுக்கு ஒரு பரிதாபமான சம்பவம் ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகுகின்றன. யூஸர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வீடியோக்களை அவர்கள் தங்களது அக்கவுண்டுகளில் போஸ்ட் செய்கிறார்கள். இதன் மூலம் அந்த வீடியோ இன்னும் ஏராளமானோருக்கு ரீச் ஆகிறது.
சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு குறித்த வீடியோக்கள் கவனம் பெறுகின்றன. அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ 14 மில்லியன் வியூஸை கடந்து பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவில் பெண் ஒருவர் பைக்கின் பின்பக்கம் அமர்ந்து கொண்டு செல்கிறார். அவரது சேலை காற்றில் அசைந்து பைக்கின் டயர் அருகே செல்கிறது. இதனை பார்த்த பின்னால் ஒரு பைக்கில் வந்த நபர் அதுகுறித்து எச்சரித்துள்ளார். இதனை அவர் அந்த பெண் அதிகம் பொருட்படுத்தவில்லை.
கடைசியில் அவருடைய சேலை பைக்கின் பின் டயரில் சிக்கி சுற்றிக்கொள்ள, அந்த பெண் தடுமாறி கீழே விழுந்தார். தற்போது இந்த வீடியோ அதிக பார்வையை குவித்து வருகிறது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது நிச்சயமாக பிராங்க் வீடியோவாக இருக்காது. பைக்கில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த வீடியோ பலருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர்.
June 28, 2025 7:25 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காத பெண்.. பைக் டயரில் சிக்கிக் கொண்ட சேலை.. அடுத்து நடந்ததுதான் பரிதாபம்