Last Updated:
நடப்பு சீசனில் தற்போது வரை 500க்கும் மேற்பட்டோர் அந்த சிகரத்தின் உச்சியை எட்டியுள்ளனர்.
உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 31 முறை ஏறி நேபாளத்தைச் சேர்ந்த கமி ரிதா சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர்.
இந்நிலையில், 8 ஆயிரத்து 894 மீட்டர் உயர சிகரத்தை கமி ரிதா செவ்வாய்க்கிழமை 31 ஆவது முறையாக ஏறியுள்ளார். 55 வயதாகும் கமி ரிதா, கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி வருகிறார். நடப்பு சீசனில் தற்போது வரை 500க்கும் மேற்பட்டோர் அந்த சிகரத்தின் உச்சியை எட்டியுள்ளனர்.
உலகின் உயரமான சிகரத்தை ஏற பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகம் பேர் மலைச்சிகரத்தை அடைய முயன்று வரும் நிலையில், மலை ஏறும் வீரர்கள் தங்கள் உடல்கழிவுகளை தாங்களே கீழே எடுத்துவரவேண்டும் என்ற விதி கடந்தாண்டு முதல் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


