பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்னைக்காக கடந்த மாதம் 26ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகவியல் மருத்துவத் துறையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் சிகிச்சைக்குப் பின், உடல்நலம் தேறிய அவர் வீடு திரும்பினார்.
96 வயதாகும் அத்வானி கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வருகிறார். இதனிடையே, அவருக்கு கடந்த மார்ச் 30, 2024ஆம் தேதிஅன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.
இதையும் படிக்க:
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் எல்.கே.அத்வானி – மருத்துவர்கள் சொல்வது என்ன?
இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு டெல்லி மதுரா சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
எல்.கே.அத்வானி, தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை டாக்டர் வினித் சூரி தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)