அதே நேரத்தில், அவர்களுக்கு காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் பெண்களுக்கு தொழில்முறை பயிற்சி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
எல்.ஐ.சி. பீமா சகி யோஜனா திட்டத்திற்கு 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் எல்.ஐ.சி.யில் வழக்கமான வேலை அல்ல, மாறாக உதவித்தொகை அடிப்படையிலான வாய்ப்பாகும். எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஏஜென்ட்கள் முதல் 3 ஆண்டுகளுக்கு பின்வரும் மாதாந்திர உதவித் தொகைகளைப் பெறுவார்கள்:
முதல் வருடம்: ரூ.7,000
இரண்டாம் வருடம்: ரூ.6,000 (முதல் ஆண்டில் விற்கப்பட்ட பாலிசிகளில் குறைந்தது 65% ஆக்டிவ்வில் இருந்தால்)
மூன்றாம் வருடம்: ரூ.5,000 (இரண்டாம் ஆண்டு பாலிசியில் 65% ஆக்டிவ்வில் இருந்தால்)
ஒவ்வொரு வருடமும் உதவித் தொகை பெற, ஒரு பெண் ஏஜென்ட் குறைந்தது 24 புதிய காப்பீட்டுக் கொள்கைகளை விற்க வேண்டும். பின்னர், முதல் வருட கமிஷனாக ரூ.48,000 சம்பாதிக்க வேண்டும். போனஸ் கமிஷன் தவிர்த்து இந்தப் பணம் வழங்கப்படும்.
தற்போதைய எல்.ஐ.சி.ஏஜென்ட்கள், எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களான கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள், மாமியார் போன்றவர்கள், ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் மறு நியமனம் பெற விரும்பும் முன்னாள் ஏஜென்ட்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
இந்தத் திட்டத்திற்கு நீங்கள் எல்.ஐ.சி. அலுவலகம் அல்லது வலைதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் அருகிலுள்ள கியோஸ்க்கையும் பார்வையிடலாம். இந்தத் திட்டத்தில் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கு இந்த ஆவணங்கள் தேவைப்படும்.
புகைப்படம் – பாஸ்போர்ட் அளவு
வயதுச் சான்று – பிறப்புச் சான்றிதழ் அல்லது 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
முகவரிச் சான்று – ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது மின்சார ரசீது
கல்விச் சான்று – 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் முழுமையற்ற தகவல்களை நிரப்பினால் அல்லது ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பித்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
August 04, 2025 4:37 PM IST

