நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவேண்டியிருந்ததால் இக்கூட்டத்தின் இடையில் அமித் ஷா வெளியேறினார். இதனால் கூட்டம் முழுமையாக நிறைவுப் பகுதியை எட்டவில்லை.
இக்கூட்டத்தில் தொடக்கத்தில் ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அவரின் மனைவி மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்புகளை மதிப்பிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், எல்லைகளில் ஊடுருவல்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பதில் தாக்குதல் நடவடிக்கைகள், வலுவான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

