எல்லா புகழும் AI-க்கு தான்.. வெறும் 3.1 ரூபாய்க்கு வர்த்தகமான ஸ்டெர்லைட் டெக் பங்குகள் 600% உயர்வு!
ஒரு காலத்தில் பென்னி ஸ்டாக் ஆக வெறும் 3.1 ரூபாய்க்கு வர்த்தகமான ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் ஏஐ வளர்ச்சியின் காரணமாக அதிகப்படியான வர்த்தகத்தை பெற்றது மட்டும் அல்லாமல் இந்திய ஏஐ துறையின் கட்டமைப்பின் முக்கிய பகுதியா விளங்குவது மூலம் 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 608 சதவீதம் வளர்ச்சி அடைந்து இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 4 சதவீதம் உயர்ந்து 52 வார உயர்வான 727 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. இந்த மாதம் மட்டும் 36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டு என்றால் மிகையில்லை, இந்தியா முழுவதும் ஏஐ மூலம் பாதிக்கப்படும் நிறுவனங்களை தான் தொடர்ந்து கேட்டும் பார்த்தும் வருகிறோம்.

ஆனால் மிகவும் சில நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாபெரும் வளர்ச்சியை 2026ல் பதிவு செய்துள்ளது. ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஹைய் ஸ்பீட் டேட்டா நெட்வொர்க்குகளை வடிவமைத்து, உருவாக்கி, நிறுவும் பணிகளை மேற்கொள்கிறது. அதிலும் முக்கியமாக ஆப்டிகல் நெட்வொர்க்கிங் பிரிவில் சிறந்து விளங்குகிறது.
இந்த நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கிளவுட் மற்றும் AI ஹைப்பர் ஸ்கேலர்கள் டேட்டா சென்டர்கள், அரசு திட்டங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றை முக்கிய வர்த்தக இலக்காகக் கொண்டு ஹைய் ஸ்பீட் டேட்டா நெட்வொர்க் சேவைகளை அளித்து வருகிறது.
இதைவிட முக்கியமாக ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனமாகும். இப்படி ஏஐ டேட்டா சென்டர் வர்த்தகம் மூலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சி தலைகீழாக மாறியுள்ளது.
ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2000ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் 107.49 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது, ஆனால் அடுத்த 2-3 வருடத்தில் இந்த பங்குகளின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3.1 ரூபாய் வரையில் சரிந்து பென்னி ஸ்டாக் அளவுக்கு சென்றது.
ஆனால் ஏஐ வளர்ச்சி மொத்த கதையும் மாறியுள்ளது, இந்த மாத துவக்கத்தில் கூட ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் பங்கு விலை 80 ரூபாய் அளவில் தான் இருந்தது. ஆனால் ஏஐ டேட்டா சென்டர்களுக்கு அதிவேக இணைப்புகள் தேவை அதிகரித்த காரணத்தாலும், இந்தியாவில் இதற்கான தேவை அதிகரித்த காரணத்தாலும் இப்பிரிவில் இருந்து மட்டும் சுமார் 21 சதவீத வருமான பங்கீட்டை கொண்டு உள்ளது.
இந்நிறுவனத்தின் ஜூன் காலாண்டு வருவாய் வருடாந்திர அடிப்படையில் 87 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1910 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. EBITDA 184 சதவீதம் உயர்ந்து 397 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 197 கோடி ரூபாயாக உள்ளது.
