Last Updated:
“பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், எல்லா நேரமும் போதையில் இருக்கிறார். போதையில் இருக்கும்போதே கோப்புகளில் கையெழுத்திடுகிறார்” என ஸ்வாதி மலிவால் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், அவைக்குள் அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் மான் மது அருந்திவிட்டு வந்ததாக, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், அவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மலிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மது அருந்திவிட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாப் போன்ற ஒரு பதற்றமான எல்லை மாநிலத்தின் முதலமைச்சர் எல்லா நேரமும் போதையில் இருக்கிறார். போதையில் இருக்கும்போதே கோப்புகளில் கையெழுத்திடுகிறார் எனவும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து ஸ்வாதி மலிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இன்று மீண்டும் ஒருமுறை, ஜனநாயகத்தின் கோவிலான பஞ்சாப் சட்டமன்றத்திற்கு மது போதையில் முழுமையாக வந்துள்ளார். பகவந்த் மான், குடித்த பிறகு குருத்வாரா சாஹிப்பிற்கு, கோவிலுக்கும், மக்களவைக்கு வருவதும், அரசு கூட்டங்களுக்கும் செல்கிறார். மேலும் வெளிநாடுகளில் அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்.
आज फिर से पंजाब CM भगवंत मान लोकतंत्र के मंदिर पंजाब विधानसभा में शराब के नशे में चूर होकर पहुँचे हैं।
ये आदमी गुरुद्वारा साहिब शराब पीकर जाता है, मंदिर शराब पीकर जाता है, लोकसभा शराब पीकर आता था, सरकार की मीटिंग में शराब पीकर जाता है, विदेश में इतनी शराब पीली की प्लेन से उतार… pic.twitter.com/M5VngsZ1sV
— Swati Maliwal (@SwatiJaiHind) May 1, 2026
தேர்தலுக்கு முன்பு, அவர் தன் தாயின் தலையில் கை வைத்து, இனி ஒருபோதும் மது அருந்த மாட்டேன் என்று அறிவித்திருந்தார்.
பஞ்சாப் போன்ற ஒரு பதற்றமான எல்லை மாநிலத்தின் முதலமைச்சர் எல்லா நேரமும் போதையில் இருக்கிறார். போதையில் இருக்கும்போதே கோப்புகளில் கையெழுத்திடுகிறார். என்னவொரு வெட்கக்கேடு.
தூங்கும் நேரத்தில் மட்டுமே மதுவிலிருந்து விலகி இருக்கும் ஒருவரால் எப்படி பஞ்சாபை ஆள முடியும்? முதலமைச்சர் பகவந்த் மானுக்கு மதுப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும், அதில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“எல்லா நேரமும் மது போதையில் இருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்…” – ஸ்வாதி மலிவால் கடும் குற்றச்சாட்டு

