தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் சேமிப்புக் குறைப்பு ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் கடினமானதாக மாறும் என்றும் சந்திரலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் எல்நினோ (El Niño) காலநிலை காரணமாக மின்சாரத்துக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் மூலங்கள் வறண்டு போவதால் மின் உற்பத்தித் திறன் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலைகளால் நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படுவதற்கும், மின்வெட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான புதிய கொள்முதல் விலைகள் குறித்து, இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவாட் மின் சேமிப்புக் குறைப்பு ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் கடினமானதாக மாறும் என்றும் சந்திரலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த சவால்களை எதிர்கொள்வதற்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதும், மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்யப் போதுமான சேமிப்புத் திறனைப் பராமரிப்பதும் மிகவும் அவசியம் என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.