ஸ்மார்ட் ஃபோன்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டு அத்தியாவசியப் பொருட்கள், அழகு, சமையலறை பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பலவற்றிற்கான சலுகைகளுடன் “மூன்று நாட்கள், மூன்று மடங்கு உற்சாகம்” என்று இந்த விற்பனை குறித்து அமேசான் குறிப்பிட்டு உள்ளது. “ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் & டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் இஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் 10% சேமிப்பைப் பெற முடியும்” என்று அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு விற்பனையின் போது பிரைம் உறுப்பினர்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் அக்சஸரீஸ்களில் = 40% வரை தள்ளுபடி பெறலாம். சாம்சங்கின் Galaxy S24 Ultra, ஆப்பிளின் iPhone 15, மற்றும் ஒன்பிளஸின் 13s போன்ற பிரீமியம் போன்களும் பெரிய தள்ளுபடிகளை பெறும் என அமேசான் தெரிவித்துள்ளது.
தவிர இந்த விற்பனையின் போது சாம்சங் Galaxy M36 5G, ஒன்பிளஸ் Nord 5, ஒன்பிளஸ் Nord CE5, ஐக்யூ Z10 Lite 5G, ரியல்மி NARZO 80 Lite 5G, ஹானர் X9c 5G, ஓப்போ Reno14 Series, லாவாவின் Storm Lite 5G மற்றும் ஐக்யூ13 உள்ளிட்ட முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் புதிய வெளியீடுகள் இருக்கும் என்றும் அமேசான் குறிப்பிட்டுள்ளது. இவை தவிர HP, Dell, Apple, Sony, Boat, JBL மற்றும் GoPro போன்ற சிறந்த பிராண்டுகளின் அக்சஸரீஸ்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் கேமராக்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு 80% வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம்.
தங்கள் என்டர்டெயின்மென்ட் செட்டப்பை மேம்படுத்த விரும்புவோர் சோனி, சாம்சங், எல்ஜி, டிசிஎல் மற்றும் சியோமியின் 600-க்கும் மேற்பட்ட மாடல்களின் பிரைம் டே சிறப்பு வெளியீடுகள் தவிர, டிவி-க்களில் 65% வரை தள்ளுபடியைப் பெறுவார்கள். சலுகைகளில் எக்ஸ்சேஞ்ச் போனஸ், எக்ஸ்டென்டட் வாரண்டி மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன்கள் அடங்கும்.
எல்ஜி, சாம்சங், போஷ், ஐஎஃப்பி மற்றும் கேரியர் போன்ற நம்பகமான பிராண்டுகளிலிருந்து குளிர்சாதன பெட்டிகள், ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் மைக்ரோவேவ் போன்றவற்றுக்கு 65% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அமேசான் இந்தியா கூறியுள்ளது. கூப்பன் மற்றும் வங்கிச் சலுகைகள் மூலம் ரூ.20,000 வரை கூடுதல் சேமிப்புடன், பிரீமியம் டெலிவிஷன் என்டர்டெயின்மென்ட் ஒரு நாளைக்கு ரூ.99-ல் தொடங்கும் மற்றும் பழைய டிவி-யை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.7,000 வரை சலுகை அளிக்கப்படும்.
அமேசான் ஃபேஷன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டைல் பொருட்களுக்கு 50-80% தள்ளுபடியை வழங்க உள்ளது. மேலும் பூமா, டைட்டன், ரெனீ, க்ரோக்ஸ், காரட் லேன் மற்றும் பிறவற்றின் புதிய கலக்ஷன்களுக்கான ஆரம்ப அணுகலை (early access) வழங்குகிறது. லிமிட்டட் டைம் டீல்ஸ் , கூடுதல் கூப்பன்கள் மற்றும் bundle டிஸ்கவுண்ட்ஸ் மேலும் அதிகமாக சேமிக்க உதவும். தவிர பிரைம் மெம்பர்கள் காரட் லேன், டைட்டன் ராகா, க்ராக்ஸ், பூமா, அர்பன் ஜங்கிள், லாவி சிக்னேச்சர், சஃபாரி டிராக்கர் மற்றும் ரெனீ காஸ்மெடிக்ஸ் போன்ற பிராண்டுகளின் பிளாட்டினம் புதிய வெளியீடுகளுக்கான பிரத்யேக ஆரம்ப அணுகலை பெறலாம். L’Oréal, Himalaya, Nivea, மற்றும் Renee ஆகிய நிறுவனங்களின் அழகு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் 70% வரை தள்ளுபடியில் கிடைக்கும், ஆண்களுக்கான அழகு சாதனப் பொருட்களுக்கும் 60% வரை தள்ளுபடி கிடைக்கும்.
பிலிப்ஸ், கோத்ரேஜ் இன்டெரியோ, ஜாக்கார், ஸ்காட்ச் பிரைட், லைஃப்லாங் மற்றும் பலவற்றின் வீடு மற்றும் சமையலறை அத்தியாவசியப் பொருட்களில் 80% வரை தள்ளுபடியை பெறலாம். சலுகை விலையில் கிடைக்கும் தயாரிப்புகளில் ஃபர்னிச்சர்ஸ், லைட்டிங், வீட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
அமேசான் ஃப்ரெஷில் வழங்கப்பட உள்ள பிரைம் டே டீல்களில் மளிகைப் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி, பிளாட் ரூ. 400 கேஷ்பேக் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட லொக்கேஷன்களுக்கு 2 மணி நேரத்தில் இலவச டெலிவரி ஆகியவை அடங்கும். ஆசீர்வாத், டாடா, ஹிமாலயா, செபாமெட் மற்றும் பல சிறந்த பிராண்டுகளின் சமையலறைப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு, உடல்நலம், நல்வாழ்வு மற்றும் பேபி ப்ராடக்ட்ஸ்களுக்கும் தள்ளுபடிகள் உண்டு.
பிரைம் டேக்கு முன்னதாக பிரைம் வீடியோ, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் கன்டென்ட் உட்பட 17 புதிய இந்திய மற்றும் சர்வதேச டைட்டில்ஸ்களை ஒளிபரப்பும். இந்த நடவடிக்கை பொழுதுபோக்கு மூலம் கூடுதல் மதிப்பை வழங்குவதற்கான அமேசானின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பிரைம் உறுப்பினர்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் & டெபிட் கார்டுகள், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி 10% சேமிக்கலாம். தவிர அமேசான் பே மூலம் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட உள்ளது, ரூ.3,000 வரை ரிவார்ட்ஸ் அமேசான் பே லேட்டர் வழியாக ரூ.60,000 வரை உடனடி கிரெடிட் மற்றும் விமான முன்பதிவுகள், ஹோட்டல் ஸ்டேஸ் மற்றும் கிஃப்ட் கார்ட்ஸ் உள்ளிட்டவற்றுக்கு டீல்களும் கிடைக்கும்.
அமேசான் பிசினஸ் யூஸர்கள் மடிக்கணினிகள், ஏசிகள், ஃபர்னிச்சர்கள் மற்றும் பலவற்றில் 70% வரை சேமிக்கலாம். கூடுதலாக, அமேசான் சஹேலி, அமேசான் கரிகர் மற்றும் லாஞ்ச்பேட் போன்ற முயற்சிகள் பெண் தொழில்முனைவோர், இந்திய கைவினைஞர்கள் மற்றும் புதுமையான ஸ்டார்ட்-அப்ஸ்களின் தயாரிப்புகளுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்கப்படும்.
July 03, 2025 9:00 PM IST
எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்க சூப்பரான நேரம்.. ஆஃபர்களை வாரி வழங்கும் அமேசான் பிரைம் டே 2025 விற்பனை