[ad_1]
Last Updated:
டெல்லியில் எலுமிச்சம்பழத்தில் ஏற்ற முயன்றபோது புத்தம் புதிய கார் கவிழ்ந்து நொறுங்கியது.
டெல்லியில் உள்ள ஷோரூமில் 29 வயதான இளம்பெண் ஒருவர் ஆசை ஆசையாக மஹிந்திரா தார் எஸ்யுவி-ஐ வாங்கியுள்ளார். 27 லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிய அந்த காரை, முதன்முதலாக ஸ்டார்ட் செய்தபோது, டயருக்கு கீழே எலுமிச்சம்பழத்தை வைத்து நகர்த்த முடிவு செய்தார்.
இதற்காக, ஷோரூமின் முதல் தளத்தில் இருந்த காரை, நகர்த்துவதற்கு முன்பு நான்கு டயர்களுக்கு அடியிலும் எலுமிச்சம்பழத்தை வைத்து, பக்காவாக தயாராகியுள்ளார். சுற்றி நின்றவர்களின் ஆரவாரத்துடன் காரை அவர் நகர்த்திய போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது.
மெதுவாக ஆக்ஸிலேட்டரை அழுத்துவதற்குப் பதிலாக வேகமாக அழுத்தியதால், முதல் தளத்தில் இருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கார் சாலையில் விழுந்தது.
தலைகீழாக கவிழ்ந்து விழுந்ததால், காரின் கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கின. காரும் கடுமையாக சேதமடைந்தது. இதில் காயமடைந்த அந்த இளம்பெண்ணும், ஊழியர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
September 10, 2025 10:19 PM IST
எலுமிச்சம்பழம் மீது காரை ஏற்ற முயன்ற பெண்; ஷோரூம் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலை குப்புறவிழுந்த அதிர்ச்சி சம்பவம்