• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியை வென்றது ராஜஸ்தான் அணி… குவாலிஃபையர் 2-ல் ஐதராபாத்துடன் மோதல்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியை வென்றது ராஜஸ்தான் அணி… குவாலிஃபையர் 2-ல் ஐதராபாத்துடன் மோதல்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளசிஸ் களம் இறங்கினர். இருவரும் ஒருநாள் போட்டியைப் போன்று விளையாட ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. 14 பந்துகளில் டூப்ளசிஸ் 17 ரன்களும், 24 பந்தில் கோலி 33 ரன்களும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர்.

விளம்பரம்

14 பந்துகளில் டூப்ளசிஸ் 17 ரன்களும், 24 பந்தில் கோலி 33 ரன்களும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரூன் கிரீனும் அதிரடியாக விளையாடுவதை தவிர்த்தார். 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். ஓரளவு அதிரடியாக ரன்களை சேர்த்த ரஜத் பட்டிதார் 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் மஹிபால் லோம்ரோர் 32 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது.

விளம்பரம்

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் கேட்மோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 46 ரன்கள் சேர்க்க டாம் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 45 ரன்களும், கேப்டன் சாம்சன் 17 ரன்களும் எடுத்தனர். ரியான் பராக் 36 ரன்களும், ஹெட்மேயர் 26 ரன்களும் சேர்க்க, ரோமன் பவெல் அதிரடியாக 16 ரன்கள் எடுத்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க – ஐபிஎல் இறுதி போட்டிக்கு 4 ஆவது முறையாக முன்னேறிய கேகேஆர்

19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ராஜஸ்தான் அணி நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

Priest Died: கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி – துரதிர்ஷ்டவசமாக பலி; நடந்தது என்ன?

Next Post

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 50% மானியமும் உண்டு.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Next Post
பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 50% மானியமும் உண்டு.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 50% மானியமும் உண்டு.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin