உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். இவர் அண்மையில் இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், நேற்று சீனா சென்று அந்நாட்டு பிரதமர் லீ க்யூயங்-ஐ(Li Qiang)சந்தித்துப் பேசினார். டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலைகள் அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனியில் இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை அமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பேச்சு நடத்த, கடந்த 21-ஆம் தேதி, இந்தியாவிற்கு வந்து, பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,கடைசி நேரத்தில் எலான் மஸ்க்கின் இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி எலான் மஸ்க் நேற்று சீனா சென்றார்.
தலைநகர் பெய்ஜிங்கில் சீன பிரதமர் லீ க்யூயங்-ஐ சந்தித்து பேசிய எலான் மஸ்க், தானியங்கி கார்களுக்கு சீனாவில் அனுமதி அளிப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் தானியங்கி கார்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அமெரிக்க வாகன பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. மென்பொருள் மாற்றத்திற்காக, அமெரிக்காவில் 20 லட்சம் தானியங்கி கார்களை கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
