இத்துடன், “சண்டை போடாதீர்கள் (Don”t Fight Guys)” என்றும் கூறியுள்ளார். இவரது நையாண்டிக்குச் சிரிக்கும் எமோஜியுடன் ரிப்ளைச் செய்துள்ளார் மஸ்க்.
அமெரிக்காவின் இரண்டு ஆகப் பெரும் ஆளுமைகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை ரஷ்யா ஆவலுடன் வேடிக்கை பார்ப்பதையே புதினின் நெருங்கிய நண்பரான மெட்வெடேவ் கிண்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ட்ரம்ப்பின் பிக் பியூடிஃபுல் பில் மசோதாவால் அவரது நண்பராக இருந்த எலான் மஸ்க் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளார். ட்ரம்ப்பின் முகாமிலேயே பிரச்னைகள் இருக்கும் சூழலில் அவர் ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே இடைத்தரகராகச் செயல்பட முயல்வதையும் இதில் மெட்வெடேவ் சுட்டிக்காட்டியுள்ளார் என்கின்றனர்.

