டெஸ்லா மற்றும் X நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், தனது புதிய தகவல் பரிமாற்ற செயலியான ‘XChat’-ஐ வரும் ஏப்ரல் 17, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளார்.
டெஸ்லா மற்றும் X நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், தனது புதிய தகவல் பரிமாற்ற செயலியான ‘XChat’-ஐ வரும் ஏப்ரல் 17, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளார்.
அத்துடன், இந்த செயலியின் முக்கிய சிறப்பம்சங்களாக பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமை பாதுகாப்பு (Privacy & Security)
இந்த செயலி ‘End-to-End Encryption’ வசதியுடன் வருகிறது. இதில் விளம்பரங்களோ அல்லது பயனர்களைப் பின்தொடரும் ‘Tracking’ முறைகளோ இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட் தடுப்பு (Screenshot Blocking)
பயனர்களின் அனுமதியின்றி உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் புதிய பாதுகாப்பு அம்சம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஆப் (Super App) இலக்கு
சீனாவின் ‘WeChat’ போன்றே, மெசேஜிங் மட்டுமல்லாமல் பணம் செலுத்துதல் (Payments) மற்றும் பிற சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு முன்னுரிமை
முதற்கட்டமாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (App Store) இந்தச் செயலி வெளியாகவுள்ளது. ஆண்ட்ராய்டு (Android) பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு எலான் மஸ்க்கின் இந்த XChat மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

