உத்தரப் பிரதேசத்தில் ஒரு எருமை மாட்டுக்கு இரண்டு நபர்கள் உரிமம் கேட்டதால் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ராய் அஸ்கரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தலால் சரோஜ் என்பவரது எருமை மாடு, சில தினங்களுக்கு முன் வழிதவறி, காணாமல் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து நந்தலால், தன்னுடைய எருமையைத் தேடத் தொடங்கியுள்ளார்.
பின்னர், நந்தலால் தேடத் தொடங்கிய மூன்றாவது நாளில், பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தன்னுடைய எருமை இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து, தன்னுடைய எருமையினை அழைத்துச் செல்ல முற்பட்டபோது, ஹனுமான் சரோஜ் என்பவர், நந்தலாலின் எருமையைச் சொந்தம் கொண்டாடியுள்ளார்.
“எருமையினைக் கொடுக்க முடியாது; அது தம்முடையது” என்று எருமையின் உரிமையாளரான நந்தலாலிடம் வாதாடியுள்ளார்.

