Last Updated:
பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சமாக 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமித்து வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் சிக்கலை எதிர்கொள்ளும் வகையில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போரால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில், பொதுமக்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக திட்டத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மண்ணெண்ணெய்
அதேபோல, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சமாக 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு 2 பெட்ரோல் பங்க்குகளில் நிபந்தனைகளுடன் 5 ஆயிரம் லிட்டர் வரை மண்ணெண்ணெய் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்த பெட்ரோல் பங்க்குகளை மாநில அரசுகள் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


