எரிபொருள் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் குழப்பமடைய தேவையில்லையென யாழ் மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாளையதினம் எடுத்து வரப்படவுள்ள பெட்ரோல்
அத்தோடு, நாளைய தினம் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லீட்டர் பெட்ரோல் எடுத்து
வரப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் அமெரிக்கா யுத்தத்தை அடுத்து எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்து மக்கள் நீண்டவரிசையில் நின்று எரிபொருளை குறிப்பாக பெட்ரோலை பெற்று வருகின்றனர்.
எனினும் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையெனவும் ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

