எரிபொருள் விநியோகம் தொடர்பான பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சிறப்புத் தொலைபேசி எண்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று பிற்பகல் (18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தொடர்புடைய தகவல்களைப் பின்வரும் எண்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொலைபேசி எண்கள்: 0112106767 / 0117296130
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

