Last Updated:
அடுத்த 2 மாதங்கள் அரசு அலுவலக வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 50 சதவிகிதம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அந்த நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தொலைக்காட்சியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வரும் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் 2 வாரங்களுக்கு மூடப்படும் என்றார்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த 2 மாதங்கள் அரசு அலுவலக வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 50 சதவிகிதம் குறைக்கப்படும் எனக் கூறிய ஷெபாஸ் ஷெரீப், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், 50 சதவிகித அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள் எனவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை.. பாகிஸ்தான் அரசு அதிரடி..!


