• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜெயலலிதாவாக த்ரிஷா? வெளியான புதிய தகவல்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜெயலலிதாவாக த்ரிஷா? வெளியான புதிய தகவல்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சினிமா
/
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜெயலலிதாவாக த்ரிஷா? வெளியான புதிய தகவல்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வரலாற்றுத் திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜெ.எம். பஷீர் தெரிவித்துள்ளார்.


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், மக்கள் திலகமுமான எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர்’ திரைப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த ஜெ.எம். பஷீர், அடுத்ததாக உருவாகும் இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார். தனது பிறந்த நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்திரைப்படம் தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பசும்பொன் தேவர் திரைப்படத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தைத் தொடங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் இளமைப் பருவம், திரையுலக வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, ஒக்டோபர் 17 முதல் ராமாபுரத்தில் தொடங்குகிறது. 

தொடக்க விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொள்ளவுள்ளதாகவும், திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஏனைய கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேசி வருவதாகவும் பஷீர் கூறினார். 

தனது மகளும் த்ரிஷாவும் தோழிகள் என்றும், தற்போது இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதால் த்ரிஷா இந்த வேடத்தை ஏற்றால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணாதுரை உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் கதாபாத்திரங்களும் திரைப்படத்தில் இடம்பெற உள்ளதால், அவர்களுக்கான நடிகர்கள் தேர்வும் நடைபெறவுள்ளது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தற்போது தவெகவில் தான் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட பஷீர், எம்ஜிஆர் திரைப்படத்தை எடுப்பதற்குத் தமக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்றார். 

முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்துள்ளதாகவும், தனது செல்வாக்கால் அவர் எதிர்காலத்தில் பிரதமராகக் கூட வர வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

Previous Post

Diwali Bonus: 78 நாட்கள் ஊதியம்.. தீபாவளி போனஸ் அறிவிப்பு.. ரயில்வே ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

Next Post

DECODE | இஸ்ரேல் விடுத்த அழைப்பு.. கறாராக மறுத்த சவுதி அரேபியா! என்ன நடந்தது?

Next Post
DECODE | இஸ்ரேல் விடுத்த அழைப்பு.. கறாராக மறுத்த சவுதி அரேபியா! என்ன நடந்தது?

DECODE | இஸ்ரேல் விடுத்த அழைப்பு.. கறாராக மறுத்த சவுதி அரேபியா! என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin